பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவியொன்றை வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் இன்று(26) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முப்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் செயலாற்ற கூடிய விதத்தில் புதிய பதவியொன்றை உருவாக்கி, அதற்காக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.