பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவியொன்றை வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது குறித்து சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில்;
“..பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பை தான் ஏற்பது, தன்னுடைய அமைச்சுப் பதவிக்குப் புறம்பாகவே ஆகும். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்னும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும்…”
“..அமைச்சுப் பதவியில் இருக்கும் போதே மேற்கொள்ளும் ஒரு யோசனையாகத் தான் இந்த பாதுகாப்புப் படை தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இன்னும், இதனை முன்னெடுக்கும் முறைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட வில்லை. ஜனாதிபதி இது தொடர்பில் இன்னும் வரையறுத்து எதனையும் கூறவில்லை. இது தொடர்பில் இன்னும் கலந்துரையாட வேண்டும்…” எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.