இந்தியன் ப்ரிமியர் லீக் (IPL) இனது 10 வது தொடரின், நேற்று(27) இடம்பெற்ற 31வது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட, குஜராத் லையன்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.
குறித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய குஜராத் லையன்ஸ் அணி 13.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்நிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கலந்து கொண்ட 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.