சோமவன்சவின் புதிய கட்சி மாநாடு ஜூன் 27

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற அதன் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சியினது மாநாடு ஜூன் 27ம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கட்சி அங்குரார்ப்பணமும் நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெறவுள்ளது.

‘சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்காக அணிதிரள்வோம்’ என்ற தொனியில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் சிவில் அமைப்புக்கள் பல பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின் அதன் அரசியல் செயற்பாடுகள் குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.