புதிய தூதுவர்களாக 9 பேருக்கு நியமனம்

ஒன்பது நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நேற்று (24) இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.  இந்த ஒன்பது பேரின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

நேற்று வெளிவிவகார அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்பது நாடுகளுக்குமான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களாவன,

1. பிரேசிலுக்கான தூதுவர் –  ஓய்வு பெற்ற முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அதிகாரி ஜகத் ஜயசூரிய
2.  ஈரானுக்கான தூதுவர் – இலங்கையின் வெளிநாட்டு சேவைகளுக்கான அங்கத்துவர் வை.கே.ஏ. ரோஹன் அஜித்
3. இஸ்ரேலுக்கான தூதுரவர் – இலங்கையின் வெளிநாட்டு சேவைகளுக்கான அங்கத்துவர் பி. செல்வாராஜ்
4. நெதர்லாந்துக்கான தூதுவர் – இலங்கையின் வெளிநாட்டு சேவைகளுக்கான அங்கத்துவர் ஏ.எம்.ஜே.சதீக்
5.  பாகிஸ்தானுக்கான தூதுவர் – ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம். தயா ரத்னாயக்க
6. கட்டாருக்கான தூதுவர் – சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி டபிள்யூ. எம். கருணதாச
7. சுவீடனுக்கான தூதுவர் – இலங்கையின் வெளிநாட்டு சேவைகளுக்கான அங்கத்துவர் திருமதி ஆர். டி. ராஜபக்‌ஷ
8. தாய்லாந்துக்கான தூதுவர் – இலங்கையின் வெளிநாட்டு சேவைகளுக்கான அங்கத்துவரும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமாகிய திருமதி ஷெனுகா செனவிரத்ன
9. வியட்னாமுக்கான தூதுவர் – இலங்கையின் வெளிநாட்டு சேவைகளுக்கான அங்கத்துவர் திருமதி எஸ்.எச்.யு. திஸாநாயக்க

ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.