8 மணித்தியால போராட்டத்தின் பின் அலுகொல்ல குன்று வனத்தீ கட்டுப்பாட்டுக்கு..

பதுளை, அலுகொல்ல பிரதேச குன்று வனப்பகுதியில் நேற்று(01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினர் , பிரதேசவாசிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து தீயினை கட்டுப்படுத்த சுமார் 8 மணித்தியாலம் தேவைப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விலங்குகளை வேட்டையாடும் முகமாக அலுகொல்ல குன்று வனப்பகுதிக்கு இனந்தெரியாத சிலரால் இவ்வாறு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் மேலும் சந்தேகிக்கின்றனர்.

(rizmira)