மீதொட்டமுல்லை குப்பை மேடு மீண்டும் சரிவில்.. – அப்பகுதி மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரிக்கை..

கொலன்னாவ – மீதொட்டமுல்லை குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், அப்பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, அவதானத்திற்குரிய பகுதிகள் எனப் பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், எச்சரிக்கையை பொருட்படுத்தாது சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வௌியேறாமல் அப்பகுதியிலேயே தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த சூழலில் இருந்து அவர்களை வௌியேறுமாறு, நேற்று(01) இரவு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)