மேதினக்கூட்டத்தில் வேட்டியுடன் மேடை ஏறி ‘காதல் ரோஜாவே’ பாடலைப் பாடி அசத்திய அமைச்சர்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டப்பேரணி கினிகத்தேனை நகரில் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் (01) இன்று இடம்பெற்ற மேதினத்தின் பேரணி கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமாகி கினிகத்தேனை பஸ் தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி வந்தடைந்துள்ளது.

இந்த நிகழ்வில், தயாசிரி ஜயசேகர, மஹிந்த அமரவீர, செந்தில் தொண்டமான், எம்.ரமேஷ்வரன் உள்ளிட்ட அமைச்சர்களும் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுள் ஒன்றான வேட்டி அணிந்து மேடை ஏறினார். அத்துடன், ‘காதல் ரோஜாவே’ என்ற தமிழ்ப் பாடலையும் படித்து அசத்தியுள்ளார்.

இதனால், அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் அமைச்சருக்குப் பெரும் வரவேற்பளித்துள்ளனர்