நாட்டின் மீதுள்ள அன்பினாலும், நாட்டை பாதுகாத்த தலைவருக்காகவுமே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் மேதினக் கூட்டத்திற்கு பெருந்திரளானோர் வருகைதந்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டடுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“நாட்டோடு விளையாட வேண்டாம் சிறிசேன மற்றும் விக்ரமசிங்க” என்பதையே நேற்று எமக்காக ஒன்று திரண்ட மக்கள் கூட்டம் தெரிவிப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் யானையின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் வேடிக்கையானது அல்ல.
துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு வெயில் அதிகரித்ததால் தலை குழம்பிப்போய் இதை செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
மோடியை இலங்கைக்கு வரவழைத்து விட்டு திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என குற்றம் சுமத்தினார்.
மேலும், சபாநாயகர் கரு ஜயசூரிய கண்களை திறந்து பார்க்க வேண்டும் எமக்காக வந்த கூட்டத்தை. அப்போது தான் உண்மையான எதிர்க்கட்சி எது? அதன் பலம் என்ன என்பதைப்பற்றி தெரியவரும் எனவும் குறிப்பிட்டார்.