இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது ஐ.தே.க. பிரசார கடமையில் ஈடுபட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினரை பதுளையில் வைத்து தாக்கியமை குறித்த முறைப்பாட்டினையடுத்தே அமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் செப்டெம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.