பாராளுமன்ற நேரடி ஒளிபரப்புகளுக்கு மில்லியன்களின் செலவு..

பாராளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இதுவரை சுமார் 42.8 மில்லியன் ரூபாவினை இலங்கை பாராளுமன்ற தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் பிரிவு தெரிவிக்கின்றது.

நாடாளுமன்ற வாத-விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்வது தற்போதைய பாராளுமன்றத்தின் தீர்மானமாகும். அதன்படி 2015ம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் 08ம் திகதி இவ்வாறு நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு மாத்திரம் peo tv கேபல் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றும் நாடாளுமன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)