செரீனா வில்லியம்ஸுக்கு ஆண் குழந்தையா or பெண் குழந்தையா.. [PHOTOS]

டென்னிஸ் உலகின் முதல்தர பிரபல வீராங்கனையான செரீனா வில்லியம்ஸுக்கும் Alexis Ohanian என்ற தொழிலதிபருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து, உங்கள் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என செய்தியாளர் ஒருவர் செரீனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த செரீனா, நானும், Alexis என் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள அவசரப்படவில்லை.

எங்களுக்கு அது சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்பதால் அது பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம் என செரீனா கூறியுள்ளார்.

மேலும், நான் கருவுற்றுள்ளது எனக்கும், Alexisக்கும் மிக மகிழ்ச்சியான உணர்வுகளை கொடுப்பதாகவும் செரீனா கூறியுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது தவறுதலாக நடந்த விடயம் எனவும் செரீனா தெரிவித்துள்ளார்.

Related image Image result for serena williams pregnant

Image result for serena williams pregnant

 

(rizmira)