2017 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடரை இலங்கை அணி கைப்பற்றும் – ஆலன் ஆரூடம்..

2017 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடரை திறமையான வீரர்கள் நிறைந்த இலங்கை அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக தென்னாபிரிக்க ஜாம்பவானும், இலங்கை இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளருமான ஆலன் டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜூன் 1ம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இலங்கை அணிக்கு சிறப்பு பயிற்சியளிக்க தென்னாபிரிக்கா ஜாம்பவான் ஆலன் டொனால்ட் ஏப்ரல் 30ம் திகதி இலங்கை வந்தார்.

ஊடகவியலாளரை சந்தித்த ஆலன் கருத்துத் தெரிவிக்கையில்;

“..இலங்கை அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். சிறப்பாக பந்து வீச்சாளர்களும் உள்ளனர். இதன் மூலம் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை இலங்கை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என நம்புகின்றேன்..” என தெரிவித்துள்ளார்.

ஆலன் டொனால்ட் 1992 முதல் 2002 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போது டொனால்ட் தென்னாபிரிக்காவின் சாதனை வீரர் ஆவார் என்பதும் நினைவு கூரத்தக்கது.

 

(rizmira)