அமெரிக்க குடியுரிமையை தான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை – பசில்…

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தான் அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் ராஜபக்ஷக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டும் நோக்கிலேயே 19ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தால் அவரினால் இலங்கைத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)