ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித் தீர்வைக் கட்டண முறையினை இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறை ஒழுங்குருத்துனரான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதித்து உள்ளது.
இதற்கு முன்னர் இம்முறையானது மூன்று மின்வழி இணைப்புகளைக் கொண்ட மற்றும் 30A மற்றும் அதற்கு அதிகமாக மின்நுகர்கின்ற நுகர்வோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இந்த வசதியினை தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும் வாய்ப்பு நுகர்வோரிடமே உள்ளது. மின் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ்வசதி செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.