அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக வடகொரியாவின் பொறுமையை சோதித்தால் சீனா கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் என்று அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பங்கேற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், பெய்ஜிங் தன் நாட்டின் பாதுகாப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும். வடகொரியாவின் பொறுமையை சோதிக்கும்படி சீனா நடந்து கொண்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும். சீனா வடகொரியாவுடன் நாட்டுடன் வைத்துள்ள உறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.