பொலன்னறுவை, பெந்திவெவ பகுதியில் பேரூந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்
நேற்று(11) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 4 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலங்கள் இன்று(12) மரண விசாரணைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.