இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரமளவில்..

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என அரச தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் சபை, நேற்று(11) அங்கீகாரம் வழங்கியது.

சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இலங்கை அரசாங்கம் அமுலாக்கி இருப்பதாகவும், அதனால் இந்த வரிச்சலுகையைப் பெற இலங்கைக்கு தகுதி இருக்கிறது என்பதால், இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும், ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான மூன்று நடைமுறை செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)