நெதர்லாந்து அரசு இலங்கை அரசிடம் வேண்டுகோள்..

சோமாலியக் கடற்கொள்ளையர்களிடத்தில் இருந்து நெதர்லாந்து தேசிய கொடியுடன் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்திடம் நெதர்லாந்து அரசாங்கம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.

இதற்கிணங்க, நெதர்லாந்தின் தேசியக் கொடியுடன் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குவது தொடர்பில், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்ச​ரவை இவ்வாறு அனுமதியளித்துள்ளது.

(rizmira)