அமைச்சரவையில் மாற்றம் செய்ய போவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதால், வாக்குறுதியை நிறைவேற்றும் வரை வாராந்த அமைச்சரவைக் கூட்டங்களை ஒத்திவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையிலேயே இது தொடர்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கு இணங்கியுள்ளதாகவும் இந்த பதிலாக எந்த அமைச்சை பெற்றுக் கொள்வது என்பது குறித்த தகவலை அவர் இன்னும் வெளியிடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.