பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் 40 வயதிற்கு மேல் 2000 ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் நேற்றைய(14) கடைசி ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தற்போது மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001-ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் உடன் 75 டெஸ்டில் விளையாடி உள்ளார்.
35 வயதிற்குப் பிறகு (2009- 2017) அவர் 4509 ஓட்டங்களை குவித்துள்ளார். கிரகாம் கூச் 4563 ஓட்டங்களும், சச்சின் தெண்டுல்கர் 4139 ஓட்டங்களும் குவித்துள்ளனர்.
40 வயதிற்குப்பிறகு 2000 ஓட்டங்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜேக் ஹோப்ஸ் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.