நிதி மோசடி சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் இனது வழக்கு ஒத்திவைப்பு..

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதி மோசடி சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாடு குறித்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் உரிய முறையில் பிரதிவாதிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை என, இதன் போது பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை பெற்றுக் கொடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதற்கமைய, வழக்கு விசாரணை ஜீலை 26ம் திகதி வரை ஒத்திவைக்க, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(rizmira)