பிரான்ஸ் நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தூதுவர் திலக் ரணவிராஜ அந்நாட்டு இரண்டாவது இளவரசர் அல்பேட்டிடம் (Prince Albert II ) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அந்நாட்டின் தூதுவராக இவர் நியமிக்கப்பட்டதையடுத்து நியமனம் தொடர்பான சான்றிதழ் ஆவணத்தை இளவரசரிடம் கையளித்தபோதே அரசியல் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வு பலேஸ் பிறின்சியர் டி மொனாகோ மாளிகையில் (Palais Princier de Monaco) இடம்பெற்றது.
தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தூதுவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்வாழ்த்துக்களை இளவரசரிடம் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையில் இடம் பெற்றுவரும் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இதனூடாக இலங்கை மேலும் பயனடையும் என்று இளவரசர் இதன்போது சுட்டிக்காட்டினார்.