பருவப்பெயர்ச்சி காலநிலை வலுப்பெற்று வருகின்றது. இதன் காரணமாக தென்மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களில் வலுவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சூழவும் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர பிரதேசங்களில் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 முதல் 55Km வரையிலான கடும் காற்றினை எதிர்பார்க்க முடியும்.
மேற்கு , வட மேற்கு , சப்ரகமுவ தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மகாணங்கிளில் ஆங்காங்கே பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் 50ml இற்கு மேற்பட்ட கடும் மழையை எதிர்பார்க்கமுடியும்.
நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமா கடல் கொந்தளிப்புடன் காணப்படும் .
இடி மின்னர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.