கொழும்பில் இன்று(17) மற்றும் நாளை(18) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கொழும்பு முதன்மை நீதிமன்ற நிதிபதியினால்இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.
கல்வி சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை காணுதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்குழு என்பன குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.