தடையுத்தரவை பயன்படுத்தி ஒடுக்க முடியாது – திட்டமிட்டபடி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்..

நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாது, இன்று(17) திட்டமிட்டபடி எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி மேற்கொள்ளப்படும் என, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

காலை 11.00 மணியளவில் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்னால் குறித்த இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வு வழங்கப்படும் வரை, தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், தடையுத்தரவை பிறப்பித்து மாணவர்களின் எதிர்ப்பை ஒருபோதும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வது மட்டுப்படுத்தப்பட்டமை, போன்ற விடயங்களை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கையை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)