இலங்கை மற்றும் கனடா இடையில் முறையான விமான சேவை..

இலங்கை மற்றும் கனடா இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள விமான சேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருவதுடன் இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமான சேவை உடன்படிக்கையும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)