எல்லா அணிகளும் இந்திய அணிக்கு பயந்தாங்கொள்ளிகளே – 360-டிகிரி வீரர் டி வில்லியர்ஸ் அதிரடி…

தென்னாபிரிக்கா அணியைச் சேர்ந்தவரும், IPL இல் பெங்களூரு அணிக்காக விளையாடியவருமான டிவில்லியர்ஸ் இந்திய கிரிக்கெட் அணி வலுவடைந்து வருவது மிகவும் பயமூட்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ். இவரை ரசிகர்கள் 360-டிகிரி வீரர் என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவருடைய துடுப்பாட்டம் பிரபல்யமானது.

இவருக்கு பந்து வீசுவதற்கு எதிரணி வீரர்கள் சற்று பயத்துடனே வீசுவர். இந்நிலையில் அவர் தான் கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரினால் இந்திய கிரிக்கெட் வலுவடைந்து கொண்டே வருகிறது.

உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்றனர்.

IPL போட்டிகளைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் கிண்ணம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் எல்லா அணிகளிலும் இந்தியா அணி குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுத்தான் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய நிலைமைக்கு இந்தியா உச்சத்தில் இருப்பதாகவே கருதுவதாகவும், இந்தியாவில் நிறைய, பெரிய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, எப்போதும் சிறந்த இளம் வீரர்கள் வந்தவண்ணம் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் தெரிவிக்கையில், தென்னாபிரிக்கா அணிக்காக விசேட திட்டங்களை தொகுத்துள்ளோம். நமக்கு இந்திய அணி சுலபம் என கருத்துத் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)