அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 08 மாணவர்களையும் நாளை(19) வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையின்போது காயமடைந்த 5 காவற்துறை அதிகாரிகள் 5 பேர் நாராஹேன்பிட்ட காவற்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.