இலங்கையில் மீளவும் முத்து சிப்பி வளர்ப்பு…

இலங்கையில் கடலை அண்டிய பகுதிகளில் பிரபலமான தொழிலாக இருந்து வந்த முத்து சிப்பி வளர்ப்பு தொழிலை மீண்டும் பிரபலப்படுத்த நாரா அமைப்பு திட்டமிட்டுள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தம் மற்றும் போர் சூழல் காரணமாக வீழ்ச்சியடைந்த இந்த தொழில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

நன்னீர் மற்றும் கடலில் மேற்கொள்ளப்படும் இந்த முத்து சிப்பி வளர்ப்புக்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

சிலாபத்தில் இருந்து சிலாபத்துறை வரையான கடல் முத்து சிப்பி வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டது என்ற போதிலும் நாட்டில் ஏயை இடங்களிலும் இவற்றை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீனவர்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

முத்து சிப்பி வளர்ப்பை வெற்றிகரமான முறையில் மேற்கொண்டால், இலங்கை பெருமளவில் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பொருளதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகில் தற்போது முன்னணி முத்து சிப்பி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் வருடாந்தம் 6 ஆயிரம் பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)