வடகொரியா அத்துமீறல் – போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு..

வடகொரியா எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், எந்நிலையையும் சமாளிக்கும் வகையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தென்கொரிய வீரர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறது. தென் கொரியாவுக்கு அவ்வப்போது எச்சரிக்கை தகவல்களையும் அனுப்புகிறது.

வடகொரியா தொடர்ந்து நம்மை மிரட்டும் வகையில் நடந்து கொள்கிறது. அவர்கள் செய்யும் அட்டகாசத்தை தொடர்ந்து பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது.

அவர்களுடைய அணு குண்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எல்லை பகுதியில் அவர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, நமது வீரர்கள் எந்த நிலையையும் சமாளிக்கும் நிலையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)