அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 50 பேர் காயம் – 06 பேரின் நிலை கவலைக்கிடம்…

காலி – அக்குரஸ்ஸை பிரதான வீதியின் கியன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 06 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இன்று(19) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

(rizmira)