வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டிட நிர்மாணத்திற்கு அனுமதி வழங்கவில்லை – சம்பிக்க..

வெள்ளவத்தையில் இடம்பெற்ற தொடர் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையிடம் குறித்த கட்டட நிர்மாணத்தின் தர நிர்ணயம் குறித்து,நிர்மாணிப்பாளர்கள் அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் பாரிய அபிவிருத்தி மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, தரம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெஹிவளை பிரதேச செயலாளர் நளினி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

(rizmira)