பாதுகாப்புச் செயலாளர் ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம்..?

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாசேன ஹெட்டியாரச்சியை குறித்த பதவிக்கு நியமிப்பதற்காக தற்சமயம் ஜேர்மனிய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொது ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றும் கருணாதிலக அமுனுகம தனது பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாசேன ஹெட்டியாரச்சி கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதி முதல் பாதுகாப்புச் செயலாளர் பதவி வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)