பாகிஸ்தான் அணியின் முன்னணி பெட்ஸ்மேனாகவும், முன்னாள் கெப்டனாகவும் திகழ்ந்த ஜாகீர் அப்பாஸ் ஐ.சி.சியின் தலைவரான நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி.யின் ஆண்டு கூட்டம் மேற்கு இந்திய தீவு நாடான பார்படோசில் நடைபெற்றது. இதில் அப்பாஸ் ஐ.சி.சி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு ஆண்டு பதவியில் இருப்பார்.
67-வயதாகும் அப்பாஸ் 1969 முதல் 1985 வரை 78 டெஸ்ட் மற்றும் 62 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 5062 ரன்களும், ஒரு நாள் போட்டியில் 2572 ரன்களும் எடுத்துள்ளார். 1975, 79 மற்றும் 1983 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர். அந்த அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 13 ஒரு நாள் போட்டியில் கெப்டனாக செயல்பட்டுள்ளார்.
இப்பதவி குறித்து அவர் கூறுகையில்; ‘‘சிறந்த விளையாட்டான கிரிக்கெட் அணியின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விளையாட்டு எங்களுக்கு மரியாதை, நண்பர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தது’’ என்றார்.