ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே சிறந்த அணியாக திகழும் தமது அணி இம்முறை சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் வரலாற்று சாதனைகளை நிகழ்த்த உள்ளதாக இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உடனான கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் 444 ஓட்டங்களை பெற்று உலகில் அதிக ஓட்டங்களை குவித்த அணியாக இங்கிலாந்து அணி சாதனை படைத்தது.
சாம்பியன்ஸ் கிண்ண தொடர் குறித்து சாதகமாக எண்ணும் மொயின் அலி, தமது நாட்டில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி கிண்ணத்தினை தம்வசப்படுத்தும் வகையில் மிகவும் பலம் பொருந்திய அணியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.