உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் ‘கொழும்பு பிரகடனம்’ ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இன்று(22) ஆரம்பமாகவுள்ள, உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது மாநாட்டில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சுகாதார அமைச்சர் விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார் என சுகாதார அமைச்சினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.