களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பேரூந்துகள் இரண்டின் மீது, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக கூறப்படும், பிரதான சந்தேக நபரான அங்கொட லொக்காவும் இன்னொரு சந்தேக நபரும் (லெடியா) இந்தியா,சென்னையில் வைத்து 20ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சயமங் உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னர் அங்கொட லொக்கா மற்றும் லெடியா ஆகியோர் கடல் வழியாக இந்தியாவிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் கைதான அங்கொட லொக்கா மற்றும் லெடியா ஆகியோர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.