இனவாத உணர்வைத் தூண்டுவோர் குறித்து ஐநா’வின் வதிவிடப் பிரதிநிதி அரசிடம் கோரிக்கை..

இனவாத உணர்வைத் தூண்டும் வகையில் செயற்படுவோர், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்குலே குறித்த இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த வாரம் சர்வதேச வெசாக் தினம் இலங்கையில் கொண்டாட்டப்பட்டதாகவும் இந்த வாரம் புத்தரின் கொள்கைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் குரோதத்தை விதைப்போருக்கு எதிராக அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

அண்மையில் முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)