கோட்டபாய எனக்கு அவரது வீட்டில் பாதுகாப்பு அளித்தார் – கேபி..

எல்.டீ.டீ.ஈ அமைப்புக்கு ஆரம்பத்தில் ஆயுதங்களை வழங்கியவர் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி என புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவுத் துறைக்கான முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்த நிலையில் அவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வருவதற்காக நான் படகுச் சேவை ஒன்றையும் நடத்தினேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை வந்த போது, கொலை செய்யப்படுவேன் என நினைத்தேன். இருப்பினும், கோட்டாபய ராஜபக்ஷ அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று உங்களுக்கு எந்த ஆபத்துக்கள் எதுவும் வராது என உத்தரவாதம் அளித்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)