சுயாதீன தொலைக்காட்சியின் இயக்குநர்கள் குழுவின் அனைவரும் தங்களது பதவிகளிலிருந்து விலகுவதாக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நேற்று(24) அறிவித்துள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சியின் தற்போதைய தலைவர் சமன் அதாவுதஹெட்டி தெரிவிக்கையில்; இது குறித்து கடந்த 23ம் திகதி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இது குறித்து ஆராய அமைச்சர் குழுவொன்றினை நியமிப்பதாக தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.