வெலிக்கடை சிறை மோதலில் பலியானோருக்கு நஷ்டஈடு

வெலிக்கடை சிறை மோதலில் பலியானோருக்கு நஷ்டஈடு

2012 நவம்பர் 12ம் திகதி வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெலிக்கடை மோதல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் உள்ளிட்ட குழு தமது விசாரணை அறிக்கையை பிரதமரிடன் அண்மையில் கையளித்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் அமைக்கப்பட்ட விசேட குழு விசாரணை நடத்த வேண்டும் என குறித்த குழுவினால் பரிந்துரை செய்துள்ளது.

அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்படி பொலிஸ் அதிகாரிகள் சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணைக்குழு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசாரணை குழுவின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.