அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியர் ஒருவர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு அடுத்தபடியாக இருக்கின்ற வைத்திய அதிகாரி உடனடியாக கடமைக்கு திரும்ப கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நிவாரணப் பணிகளுக்காக அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பின் எந்தவொரு ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.