சீரற்ற காலநிலையால் தென் மாகாணம் பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதேசமான தங்காலையும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.




