வடகொரியாவால் மற்றுமொரு ஏவுகணைச் சோதனை – தென்கொரியா சாடல்..

ஏவுகணைச் சோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவற்றை புறந்தள்ளி வடகொரியா இன்று(29) மற்றுமொரு ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணை ஜப்பானின் கடற்பகுதியில் வீழ்ந்ததாகவும், குறித்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஏவுகணை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இதுவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் ஒன்றாக இருக்கலாம் என தென்கொரிய உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இந்த ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு சபையுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

வட கொரியாவினால் அண்மையில் இரண்டு வெற்றிகரமான ஏவுகணைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்த மூன்றாவது ஏவுகணைச் சோதனையும் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)