இளம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பினை வழங்கி எதிர்வரும் காலத்தில் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற எண்ணியுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாத்தண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
“இன்று பாராளுமன்றில் திறமையான இளம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். நான் சேவை செய்த காலம் போதும் என எண்ணுகிறேன். நாம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நான் ஒருபோதும் தோற்றதில்லை. தொடர்ச்சியாக வென்றேன்… அது நான் மக்களுக்கு நேர்மையாக சேவை செய்தமையே ஆகும். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய நல்லாட்சி அரசே தற்போதைய அரசாகும். சில அரசியல் கட்சிகள் பேராசையினால் அரசின் பயணங்களுக்கு தடங்களாக ஊள்ளன..” என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.