நீரில் மூழ்கியதால் மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையியேயான பகுதி வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் , தற்போதைய நிலையில் தெற்கு அதிவேக வீதியில் கடவத்தை தொடக்கம் கொக்மாதுவ வரையில் தடையின்றி வாகனங்கள் பயணிக்க முடியும் என நெடுஞ்சாலை நடவடிக்கைகள் பணிப்பாளர் எஸ் .ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை , கொக்மாதுவ மற்றும் கொடகமவிற்கு இடையிலான பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது.