சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் அரசும் உதவியளித்துள்ளது.
நேற்று(30) மாலை வெளிவிவகார அமைச்சின் வளாகத்தில் குறித்த நிவாரணம் வழங்கப்பட்டதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பலும் நேற்று(30) மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் தரங்சித் சிங்கினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அந்த நிவாரணம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனா, பாகிஸ்தான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் உதவிகள் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.