கூட்டு எதிர்க்கட்சி பா.உறுப்பினர்களின் சம்பளம் நிவாரணங்களுக்காக.. – அரசின் 10 இலட்சம் எங்கே..?

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது சம்பளம் மற்றும் தனிப்பட்ட பணம் ஆகியவற்றினை வழங்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் துணைத்தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டீ.ரஞ்சன் டி சொய்சா ஊடக முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது ஆலோசனைக்கு அமையவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் குறித்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 கோடி 20 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி பதிக்கப்பட்ட ஒரு நபருக்கு 10 இலட்சம் ஒதுக்கவும் எதிர்பார்ப்பதாக அரசிடம் கோரியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)