வெள்ளவத்தை கட்டடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை என பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக எழுந்து நிற்கும் மக்கள் இயக்கமொன்று தற்பொழு நாட்டுக்கு தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கட்டட உரிமையாளருக்கு ஒரு சிறு காலத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக கவலை வெளியிடுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது